என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » பெட்ரோல் பங்க் ஊழியர்
நீங்கள் தேடியது "பெட்ரோல் பங்க் ஊழியர்"
வில்லியனூர் அருகே பணம் கடன் கொடுக்க மறுத்த பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி:
திண்டிவனம் அருகே பேரணை கிராமத்தை சேர்ந்தவர் தமிழ்செல்வன் (வயது45). இவர் வில்லியனுர் அருகே கூனிமுடகில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இவரிடம் பக்கிரிபாளையத்தை சேர்ந்த அண்ணன்-தம்பிகளான ஜெயராமன் (27), சீத்தாராமன் (25) ஆகியோர் ஏற்கனவே பணம் கடன் வாங்கி இருந்தனர்.
அந்த பணத்தை அவர்கள் திருப்பி கொடுக்காத நிலையில் நேற்று பெட்ரோல் பங்கில் இருந்த தமிழ்ச்செல்வனிடம் மீண்டும் ரூ.500 கடன் கேட்டனர். ஆனால் தமிழ்செல்வன் பணம் கொடுக்க மறுத்து விட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயராமன்-சீத்தாராமன் ஆகிய இருவரும் சேர்ந்து தமிழ்செல்வத்தை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து தமிழ்செல்வன் வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நந்தகுமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து ஜெயராமன்- சீத்தாராமன் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். #tamilnews
மத்திய பிரதேச மாநிலத்தில் தொடர்ந்து லீவு போட்ட பெட்ரோல் பங்க் ஊழியரை கட்டி வைத்து சவுக்கால் அடித்த உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். #OwnerWhipsEmployee
போபால்:
மத்திய பிரதேச மாநிலம் ஹோஷங்காபாத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் வேலை பார்த்த ஊழியர் ஒருவர் 5-6 நாட்களாக வேலைக்கு வராமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த உரிமையாளர் அந்த ஊழியரை வரவழைத்து திட்டி அடித்துள்ளார். அத்துடன் விடாமல், கட்டி வைத்து சவுக்கால் அடித்துள்ளார்.
ஊழியரை அடிக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ இன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அந்த வீடியோவில் பெட்ரோல் பங்க் உரிமையாளர், ஊழியரை பில்லரில் கட்டி வைத்து அடிக்கிறார். உரிமையாளரின் நண்பரும் உடன் இருக்கிறார். அப்போது, அந்த ஊழியர் விபத்து ஏற்பட்டு காலில் அடிபட்டதால் 5-6 நாட்களாக வேலைக்கு வரமுடியவில்லை, என்று கூறுகிறார்.
எனினும் அவர் கூறும் காரணத்தை ஏற்றுக்கொள்ளாத உரிமையாளர், காலில் அடிபட்டால் என்ன, கூப்பிட்டால் வரமுடியாதா? என்று கேட்டு தொடர்ந்து அடிக்கிறார். ஊழியரை தாக்கியது தொடர்பாக 2 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர். #OwnerWhipsEmployee
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X